மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (02.09.2024) சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையிலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளுரில் உதவி ஆணையர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #CMDA #Chennai