நியாயமான பயன்பாடு
நியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் "நியாயமான பயன்பாடு" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது:
விமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்ற ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:
- நோக்கமும் வகையும் - வணிக நோக்கம் உண்டா அல்லது இலாபம் நோக்காத கல்விப்பணியா;
- காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் தன்மை;
- காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் முழுமையுடன் நோக்கில் எத்தனை அளவு அல்லது பெருமளவு எடுத்தாளப்பட்டுள்ளது;
- செயல்பாட்டினால் காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் பொருளியல் மதிப்பில் அல்லது வாய்ப்புள்ள சந்தையில் ஏற்படும் தாக்கம்.
ஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "US CODE: Title 17,107. Limitations on exclusive rights: Fair use". .law.cornell.edu. 2009-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-16.
வெளியிணைப்புகளும் உசாத்துணைகளும்
[தொகு]சட்டம் & வழக்கு மூலங்கள்
[தொகு]- Limitations on exclusive rights: Fair use—from the US Copyright Office
நியாயமான பயன்பாட்டின் பொருளியல் ஆதாயங்கள்
[தொகு]- Computer and Communications Industry Association. "Economic Contribution of Industries Relying on Fair Use." September 2007 பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
நியாயமான பயன்பாட்டைக் குறித்த உசாத்துணைகள்
[தொகு]- U.S. Copyright Office: Fair Use பரணிடப்பட்டது 2007-12-20 at the வந்தவழி இயந்திரம்
- "Best Practices in Fair Use" பரணிடப்பட்டது 2009-09-07 at the வந்தவழி இயந்திரம். American University Center for Social Media. November 18, 2005.
- Fair Use of Copyrighted Materials by Georgia Harper, The Copyright Crash Course, University of Texas at Austin Libraries
- Bound by Law by Duke University's Center for the Study of the Public Domain
- Fair Use: Copyright Management Center பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம், with Copyright Essentials including a fair use checklist.
- Copyright and Fair Use பரணிடப்பட்டது 2007-06-09 at the வந்தவழி இயந்திரம்—from Stanford University Libraries
- Electronic Frontier Foundation. Electronic Frontier Foundation
- YouTube video "A Fair(y) Use Tail". Eric Faden, produced by Media Education Foundation
- Checklist for fair use பரணிடப்பட்டது 2004-03-30 at the வந்தவழி இயந்திரம் Indiana University-Purdue University Indianapolis
- A Practical Guide to Fair Use Doctrine. Signal or Noise 2K5. Harvard University
- A guide to the circumstances of fair use பரணிடப்பட்டது 2011-04-19 at the வந்தவழி இயந்திரம். University of Texas Systems Dept.
- "Will fair use survive? Free Expression in the Age of Copyright Control". Brennan Center for Justice.
- Code of Best Practices in Fair Use for Online Video - American University Center for Social Media. July 7, 2008.